கிரிந்த பகுதியில் பெருமளவான ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கத் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
சந்தேக நபர்கள் நேற்று (12) மாலை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, இந்தச் சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

மேல் மாகாண வடக்குக் குற்றப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிரிந்தப் பகுதியில் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 345 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையுடன் நேற்று (12) ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். (சந்தேகநபர்களின் எண்ணிக்கை நீதிமன்ற உத்தரவின் போது 8 ஆக உள்ளது.)
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள், தற்போது டுபாயில் பதுங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான, திக்கவெல்ல ‘ரன் மல்லி’ என்பவருக்குச் சொந்தமானது எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The Tissamaharama Magistrate’s Court has granted permission to the police to detain and interrogate eight suspects for seven days in connection with the seizure of a large quantity of “Ice” (Crystal Meth) narcotic in the Kirinda area. The suspects were presented before the Magistrate’s Court yesterday (12), following their arrest by the Western Province North Crime Division. The arrest was based on a tip-off leading to the capture of 345 kg of Ice, which was smuggled into the country via the sea route. Initial police investigations suggest the seized narcotics belong to an organized crime gang member and drug trafficker known as ‘Thikkwella Ran Malli,’ who is currently hiding in Dubai.



