படல்கும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன், 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதியன்று குறித்த சிறுமி களனி பிரதேசத்தில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர், தனது இளைய மகளை காணவில்லை என தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தகவலின் பேரில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அந்த மருத்துவ அறிக்கையில் அச்சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது.
சிறுமி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தான் அலுப்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளைஞனுடன் காதல் கொண்டிருந்ததாகவும், கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அவனுடன் பெரியப்பாவின் வீட்டிற்குச் சென்றதாகவும் கூறியுள்ளார். அங்கு பெரியப்பாவின் மகள் மட்டுமே இருந்த நிலையில், பின்னர் காதலன் அங்கு வந்ததாகவும், இருவரும் கணவன்-மனைவியாக இருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த சிறுமி, வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, சந்தேகநபரான இளைஞனைக் கைது செய்துள்ள பொலிஸார், அவரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக படல்கும்பர பொலிஸார் தெரிவித்தனர்.
___________________________________________________________________
A 27-year-old man from the Padalkumbura area has been arrested for allegedly sexually assaulting a 15-year-old girl. The girl’s father filed a police report after she went missing. During the investigation, a medical examination confirmed she had been sexually assaulted. The girl told police that she had been in a relationship with the suspect and that the assault occurred in her uncle’s house. Police have arrested the suspect and are preparing to present him before the Monaragala Magistrate’s Court.