Thursday, October 30, 2025

கடத்தி துஸ்பிரயோகம் செய்ய முயன்றோர் தாக்குதல் ; நடுவீதியில் சிறுமி உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர். அப்போது ஒசக்கோட்டை பொலிஸில் இருந்து சிறுமியின் பெற்றோருக்கு அழைப்பு வந்தது.

விபத்தில் சிக்கி பலி

இதன் போது பொலிஸார் விபத்தில் சிக்கி உங்கள் மகள் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவளது பெற்றோர் ஒசக்கோட்டை பொலிஸாரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய கடத்திச் சென்றபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, அவள் பலியானது தெரியவந்தது.

இதுதொடர்பாக ஒசக்கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி சிறுமியை கடத்திச் சென்றதாக 4 வாலிபர்களைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவர்கள் ஒசக்கோட்டையைச் சேர்ந்த அஜய் என்ற சிறுவன் உள்ளிட்ட குழு என்பது தெரியவந்தது. குறித்த சிறுமி பேருந்துக்காகக் காத்திருந்தபோது அஜய் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்துள்ளார். அப்போது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்வதற்காக பஸ் நிறுத்தத்தில் இருந்து அவளைக் கடத்திச் சென்றுள்ளனர்.

சிறுமி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றதால், ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

In a shocking incident near Hoskote, Bengaluru Rural district, Karnataka, India, a 14-year-old schoolgirl who did not return home was found to have died in a road accident. Following a complaint filed by her parents, who suspected foul play, police launched an investigation. The investigation revealed that the girl was kidnapped from a bus stop for the purpose of sexual assault by a group of four youths, including one named Ajay, who were traveling on motorcycles. When the girl tried to escape, the motorcycle they were traveling on crashed, resulting in her death due to severe injuries. The other occupants of the motorcycle were also seriously injured. Hoskote Police have arrested the four youths involved in the kidnapping and death.

Hot this week

சிறைக்குள் உயிரிழந்த கைதி; விசாரணை தீவிரம்

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (29) பிற்பகல் தான்...

பூப்பறிக்க சென்ற போலீசாருக்கு நடந்த விபரீதம்; மர்ம நபர்களின் தாக்குதல்

போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரை உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவரால்,...

காதலனின் கைப்பையில் பெண்களின் நிர்வாண படங்கள்; நண்பர்களுடன் சேர்ந்து அதிர்ச்சி சம்பவம் செய்த காதலி

பெண்களின் நிர்வாணப் படங்களை வைத்திருந்த காதலனை நண்பர்களுடன் சேர்ந்து அவரது காதலி...

வனப்பகுதியில் மர்மமாக உயிரிழந்த இளைஞன்; சடலம் மீட்பு!

நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் நேற்று (29) காலை ஒரு ஆண் நபரின்...

யாழில் சிசுவின் மரணம்; பாலூட்டிய தாய்க்கு அதிர்ச்சி, மீளாத்துயரில் குடும்பம்!

யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று (29)...

Topics

நட்பின் பெயரில் கொலை; பிரதேச சபைத் தலைவர் மரணம் மர்மம் அவிழும்!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது...

மூன்று மர்ம சடலங்கள் மீட்பு!

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில், அடையாளம்...

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 4 மணிக்குப் பிறகு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img