பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் போக்குவரத்து அமைச்சு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (24) காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
பொதுப் பேருந்துகளில் கட்டணம் செலுத்திய பின்னர் மீதிப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் குழப்பங்கள் போன்ற சிக்கல்களுக்குத் தீர்வாக, வங்கி அட்டைகள் (Debit/Credit Cards) மூலம் பணம் செலுத்தும் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியன இணைந்து இந்தப் புதிய கட்டண முறையை நடைமுறைப்படுத்துகின்றன.
இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக, சுமார் 20 வழித்தடங்களில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
The Ministry of Transport announced that starting today, passengers traveling on buses will be able to purchase tickets using bank cards (debit/credit), a facility introduced to resolve issues like not receiving change after payment. The launch event for this new system, a joint initiative between the Ministries of Digital and Transport, will take place this morning (24th) at the Makumbura Multi-Modal Transport Centre, with an initial plan to implement the system on approximately 20 bus routes.



