மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
ஏரளக்குளம், கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்லரத்தினம் என்பவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடந்த நேற்று (14) பிற்பகல் 11.00 மணியளவில், அவர் வயலில் இருந்து தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்தக் கொடூரமான யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தார்.
உடனடியாக அவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், வழியிலேயே உயிரிழந்தார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
A 65-year-old farmer named Vairamuththu Nallarathinam from Eraikkulm, Karunkanmadu area, within the Kandiyanaru Police Division of Batticaloa, was killed by an elephant yesterday (the 14th) at around 11:00 PM while returning home from his field. Although he was immediately rushed to the Sandiveli Regional Hospital, he died on the way, and the Kandiyanaru Police are conducting further investigations into the incident.