இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த மூன்றே நாட்களில், மணப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் புது மாப்பிள்ளை மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் மகாஸ்ரீ ஆகிய இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நட்பு ஏற்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்தத் தம்பதியினர் தங்களது திருமண நிகழ்வுப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.
இதற்கிடையில், மகாஸ்ரீ இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்த அவரது முதல் கணவரின் உறவினர்கள், புதுமணத் தம்பதியரைத் தீவிரமாகத் தேடி, மாப்பிள்ளை வீட்டுக்குக் காரில் வந்து புது மணப்பெண் மகாஸ்ரீயைச் சரமாரியாகத் தாக்கினர்.
இந்நிலையில், அப்பகுதியினர் காரில் வந்த நபர்களிடம் விசாரித்தபோது, கடந்த 18 வருடத்திற்கு முன்பே மகாஸ்ரீக்குத் திருமணம் ஆனதும், மேலும் 15 வயதில் ஒரு பெண் குழந்தையும், 13 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்தும், தனது வயதைக் குறைத்துக் கூறியும் ஏமாற்றி மகாஸ்ரீ இந்தத் திருமணத்தைச் செய்தது அம்பலமானது.
மேலும், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மகாஸ்ரீயின் பெற்றோர்கள் பராமரிப்பில் இருந்து வந்த இரு குழந்தைகளையும், முதல் கணவரின் உறவினர்கள் பொலிஸில் ஒப்படைத்தனர்.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த புது மாப்பிள்ளை ஸ்ரீதரின் குடும்பத்தினர், புது மணப்பெண் மகாஸ்ரீயை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், அவர் கழுத்தில் கட்டிய 5 பவுன் தாலிக் கொடியையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
A newly married groom, Sridhar, and his parents in Namakkal district were shocked to discover, just three days after the wedding, that the bride, Mahashri, already had a previous marriage of 18 years and two children, aged 15 and 13. The deception was exposed when the first husband’s relatives, who learned about the second marriage via Instagram posts, located the couple and attacked the bride. Following the revelation that Mahashri had concealed her past and misrepresented her age, the groom’s family rejected her and retrieved the $5$-sovereign wedding chain. The children are currently in the custody of police after being handed over by the first husband’s relatives.


