பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் பகுதியில் கோபால், வரலட்சுமி தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர்.
கோபாலின் சொந்த ஊர் தமிழகத்தின் வேலூர் மாவட்டம், படவேடு கிராமம் ஆகும். இவர் பல ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
ஒருதலை காதல்
இவரது மகள் யாமினி பிரியா, தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரை, எதிர்வீட்டில் வசிக்கும் விக்னேஷ் (25) என்பவர் ஒருதலையாகக் காதலித்தார். பலமுறை தன் காதலை வெளிப்படுத்தியும், யாமினி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீராமபுரத்தில் நடந்த திரவுபதி அம்மன் கோவில் கரக ஊர்வலத்தின்போது, விக்னேஷ் வலுக்கட்டாயமாக யாமினியின் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி உள்ளார். பின், அந்தக் கயிற்றை அவர் கழற்றிவிட்டார்.
சம்பவத்தன்று, யாமினி கல்லூரி முடிந்ததும் மெட்ரோ ரயிலில் வந்து, மல்லேஸ்வரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற விக்னேஷ், வழியில் மறித்து தகராறு செய்தார்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து யாமினியின் கண்ணில் தூவி, அவரது கழுத்தைக் கத்தியால் அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய யாமினி, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்த பெற்றோர், சம்பவ இடத்திற்கு வந்து மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். தலைமறைவாக உள்ள விக்னேஷை பொலிஸார் தேடிவருகின்றனர்.
A 20-year-old Tamil college student, Yamini Priya, residing with her family in Srirampuram, Bengaluru, was brutally murdered near the Malleswaram Metro station by her neighbor, Vignesh (25), who was obsessed with her in a case of one-sided love. Vignesh, who had previously forced a ‘thali’ (yellow thread) onto her neck during a temple festival in April, intercepted her, threw chili powder in her eyes, and then slit her throat with a knife before fleeing the scene, leaving her to die; police are currently searching for the absconding suspect.