இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியதாக, பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு பற்றிய முறையான சட்டரீதியான ஏற்பாடுகள் இதுவரை நடைமுறையில் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தற்போதைய தேவையாகவுள்ள குடும்ப மட்ட மாற்றுவழிப் பாதுகாப்பான, ஊட்டமளிக்கும் பாதுகாப்பு (பெற்றோர் பாதுகாவலர் முறை) என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்த, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஒரு கருத்தாக்கப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேசப் பொறிமுறை மூலம், இரண்டு முக்கிய முறைகளின் கீழ் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது: முதலாவதாக, பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு முறையை நிறுவுதல்; இரண்டாவதாக, தொலைதூர பெற்றோர் பாதுகாவலர் ஒத்துழைப்புகளை ஊக்குவித்தல்.
இந்தக் கருத்தாக்கப் பத்திரத்தின் அடிப்படையில், பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பிற்காக ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கான பதில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
______________________________________________________________________
The Sri Lankan government has approved a proposal to introduce a new legal framework for alternative care, specifically a foster parent guardianship mechanism for children in need of protection. This decision follows the identification of a lack of formal legal arrangements for parental guardianship in the country. The National Child Protection Authority submitted a concept paper to establish this mechanism, which will focus on implementing a foster parent care system and supporting distant parental guardianship. The cabinet has approved the proposal submitted by the Acting Minister of Women and Child Affairs to instruct the legal draftsman to prepare a new bill based on this concept paper.