குடும்ப வறுமைக் காரணமாக பகுதி நேர வேலை தேடிவந்த, சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கு, டெலிகிராம் ஆப் மூலம் Call Boy வேலை உள்ளது எனக்கூறி, ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
பிறகு, அந்த நபர் ஒரு மெசேஜை அனுப்பியுள்ளார். அதில், “கஷ்டப்படுறீங்களா? Call Boy Job -க்கு ரெடியா? ஒரு பெண் கஸ்டமரை அட்டெண்ட் செய்து உல்லாசமாக இருந்தால் 5,000 ரூபாயை அவர்களே உங்களுக்கு கொடுப்பார்கள் என அந்த மெசேஜில் கூறப்பட்டிருந்தது.
என்னது Call Boy வேலையா? அதுவும், ஒரு பெண்ணிடம் உல்லாசமாக இருந்தால் 5,000 ரூபாய் சம்பளம் கிடைக்குமா? ஒருநாளைக்கு எத்தனை பெண் கஸ்டமர்களை அணுகினால், எவ்வளவு ஆயிரங்கள் கிடைக்கும்? கரும்பு திண்ண கூலி…தினம் தினம் ஜாலி… என அந்த இளைஞனின் மூளை cash counting machine-ஆக மாறி பணத்தை செம்ம ஸ்பீடாக எண்ணிப்பார்க்க, ‘அடடா மழைடா அட மழைடா… இந்த வேலை கிடைச்சா, நம்ம காட்டுல பண மழைடா’ என குதூகலத்தில் குத்தாட்டம் போட்டது, அவரது மனசு.
இந்தநிலையில்தான், அந்த கும்பலைச் சேர்ந்த நபர் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கு பணம் வேண்டும் எனக் கூறி வாலிபரிடம் முதலில், 500 ரூபாய் ஜி பேவில் பெற்றுள்ளார்.
பின்பு, ஒரு லொகேஷனுக்கு வரச்சொல்லியிருக்கிறார். அந்த லொகேஷனுக்கு வந்துவிட்டீங்களா? அப்படின்னா, இன்னொரு 500 ரூபாய் ஜி பே பண்ணுங்க. உடனே, கஸ்டமர் இருக்கும் லொகேஷனை அனுப்பிவிடுகிறேன் என கூறியுள்ளார்.
இன்னும் 5,00 ரூபாய் தானே? 5,000 ரூபாய் கிடைக்கப்போகிறது, என யோசித்த இளைஞன், தனது நண்பனிடம் கடன் வாங்கி மீண்டும் அனுப்பி வைத்துள்ளார்.
பெண் கஸ்டமரின் நம்பர் வந்துவிட்டது. இதோ, அவருக்கு கான் கால் போடுகிறேன் என கூறி, கான் காலும் போட்டு பேச வைத்துள்ளார். மறுமுனையில் ஏகோபித்த ஏக்கங்கள், கிளு கிளு சிணுங்கல்களுடன் பெண் குரல் கேட்க, கஸ்டமரை நெருங்கிவிட்டோம், அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, ஐயாயிரம் ரூபாயை வாங்கப்போகிறோம் என்ற எக்ஸைட்மெண்டில் இருந்த இளைஞருக்கு மீண்டும் ஒரு டிவிஸ்ட் காத்துக்கொண்டிருந்தது.
இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள், அந்த பெண்ணின் தொடர்பு எண்ணை உங்களுக்கு அனுப்புகிறேன் என ஆசையை தூண்டியுள்ளார்.
அதற்குப்பிறகு, உங்களுக்காக காத்திருக்கும் அந்த இளம்பெண் கஸ்டமர் இவர்தான் என ஒரு ஃபோட்டோவையும் அனுப்பி வைத்துள்ளனர். இப்படி, சிறிது சிறிதாக 11,500 வரை அந்த வாலிபரிடம் பெற்றுக் கொண்டு அவரை அம்பத்தூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வர வைத்துள்ளார்.
அங்கு காத்துக் கொண்டிருந்த பொழுது, நீங்கள் அந்த வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துவிட்டு பணத்தை கஸ்டமரிடம் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
அதை நம்பி குபேந்திரன், விஜய் சிவக்குமார் என்கிற பெயர்களின் Gpay நம்பர்களுக்கு, பணத்தை அனுப்பிக்கொண்டே இருந்திருக்கிறார், அந்த அப்பாவி இளைஞன்.
ஒரு கட்டத்தில் விரக்தியின் விளிப்பிற்கே சென்ற இளைஞன், பெண் கஸ்டமரின் லொலேஷனை கேட்க, அந்த நபரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பிறகுதான், ஒரு கட்டத்தில், தான் விபூதி அடிக்கப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த அந்த இளைஞன், ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
வறுமைச்சூழல் காரணமாக பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்த இளைஞரை குறிவைத்து, மோசடி செய்த அந்த கும்பல் குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ளது, காவல்துறை.
அதேநேரத்தில், இதுபோன்று உழைக்காமல் எப்படி சம்பாதிக்கலாம்? என யோசித்தால், இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்கவேண்டியிருக்கும். எனவே, நேர்மையான வேலைகளில், உழைத்து சம்பாதிக்கத் தயாராக வேண்டும் என எச்சரிக்கிறார்கள் காவல்துறையினர்.