வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், கணவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று (17) மாலை வெலிமடைப் பிரதேச செயலாளர் பிரிவில் பெய்த அதிக மழை காரணமாகவே இவர்கள் இருவரும் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு முழுவதும் பிரதேசவாசிகளால் இந்தத் தம்பதியினரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது 32 வயதுடைய மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாகவும் ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார்.
காணாமல் போனவர் 37 வயதுடைய ஆண் ஆவார். அவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
In Kandepuhulpola, Boralanda, Welimada, a couple was swept away by a flood caused by heavy rain yesterday evening (17). Following an overnight search conducted by local residents, the 32-year-old wife’s body was recovered, but the 37-year-old husband remains missing. Search operations for the missing man are continuing.



