கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று (08) அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், எம்பிலிபிட்டிய பகுதியில் குறித்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, மேற்கண்ட துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் உஷி (Uzi) வகை துப்பாக்கி ஒன்று, 9 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கி, 9 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 53 தோட்டாக்கள், T56 ரக 19 தோட்டாக்கள், T56 ரக 2 வெற்று தோட்டாக்கள், ஒரு ஜோடி கைவிலங்கு மற்றும் 300 கிராம் ஹெராயின் ஆகியவற்றைத் தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது.
___________________________________________________________________
Three suspects have been arrested in connection with a double murder by shooting that occurred on June 24 in the Thekkawatta area of the Middeniya police division. Acting on a tip-off, officers from the Tangalle Criminal Investigation Department arrested the three suspects, all 25 years old and from the Embilipitiya area. Authorities seized a Uzi-type firearm, a 9mm pistol with 53 bullets, 19 T56 bullets, two empty T56 casings, a pair of handcuffs, and 300 grams of heroin from the suspects.