இன்று (27) அதிகாலை பூகொடை-தொம்பே வீதியில் தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன.
தொம்பே பகுதியில் வைத்து இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு, விபத்தில் சிக்கிய பேருந்துகள் இரண்டினதும் முன்பக்கங்கள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன. எனினும், பேருந்துகளில் பயணித்த பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை.
____________________________________________________________
Two private passenger buses collided head-on on the Pugoda-Dompe road early this morning (27th). Both bus drivers were injured and hospitalized, and the front sections of the two buses were severely damaged. However, no information has been released regarding the passengers who were travelling on the buses.