கனடாவின் டொரொண்டோ, நோர்த் யார்க் (North York) பகுதியில் கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பில் ஏழு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இந்தக் கோர விபத்தில் காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில், ‘வாயு வெடிப்பு’ குறித்த தகவல் கிடைத்ததன் பேரில், உடனடியாகத் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது கட்டிடத்தில் தீப்பிடித்திருக்கவில்லை என்று டொரொண்டோ தீயணைப்புச் சேவை அதிகாரி பால் ஓ’பிரையன் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவம் கட்டிடத்தின் 22ஆம் மாடியில் அமைந்துள்ள பென்ட்ஹவுஸ் மெக்கானிக்கல் அறையில் நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. வெடிப்பில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்ற மூன்று பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். டொரொண்டோ தீயணைப்புத் துறையிலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.
கட்டிடத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Seven workers were injured, with four in critical condition, following an explosion in a building under construction in the North York area of Toronto, Canada. Although initially reported as a gas explosion, fire officials found no active fire upon arrival. The blast occurred in the penthouse mechanical room on the 22nd floor, and investigations have begun after all occupants were evacuated.