மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில், ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து, தான் ஒரு கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என்று கூறி பல இலட்சம் ரூபாய் மோசடி செய்த போலி சட்டத்தரணி ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடம்: மட்டக்களப்பு நீதிமன்ற வளாகம்.
போலி சட்டத்தரணி, தான் ஒரு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என அறிமுகப்படுத்திக்கொண்டு, பொதுமக்களிடம் இருந்து வழக்குத் தொகை மற்றும் சில அதிகாரிகளுக்குப் பணம் வழங்க வேண்டும் எனக் கூறி பல இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார்.
மீட்கப்பட்ட தங்க ஆபரண வழக்கில் ஆஜரான பெண் ஒருவரின் சட்டத்தரணிக்கு, குறித்த போலி சட்டத்தரணி மீதும், அவர் முன்கூட்டியே வழக்கை வரவழைத்த விதத்திலும் சந்தேகம் ஏற்பட்டது.
சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றப் பதிவாளர் அடையாள அட்டையைக் கோரியபோது, அவர் தனது காரில் இருப்பதாகக் கூறிவிட்டு, சட்டத்தரணிகள் நிறுத்துமிடத்தில் இருந்த தனது வாகனத்துடன் தப்பிச் சென்றார்.
நீதவானின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், பொலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தி, நேற்று (சனிக்கிழமை, நவம்பர் 08) இரவு ஓந்தாச்சி மடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து அவரைக் கைது செய்தனர்.
சந்தேகநபர் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்ற வளாகத்துக்குள் நடமாடி வந்துள்ளார்.
அவர் தனது வாடிக்கையாளர்களைப் பல சட்டத்தரணிகளுக்கு அனுப்பி, அவர்களைத் தன்னுடைய சிரேஷ்ட அல்லது கனிஷ்ட சட்டத்தரணிகள் என அறிமுகப்படுத்தி மோசடி செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து போலி வருகை அட்டை, இரப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்தில் ஒட்டப்படும் ஸ்டிக்கர், கோட் சூட் மற்றும் 16 வழக்குக் கோப்புகள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A fake lawyer has been arrested by police after he scammed several members of the public out of millions of rupees by impersonating a Colombo High Court Attorney-at-Law within the Batticaloa Court complex.
The suspect, who wore a formal legal attire, was found to have been operating for over a year and a half, soliciting large sums of money from clients under the guise of legal fees and bribes.
His scheme was exposed when a genuine lawyer became suspicious of his actions in a case involving the recovery of stolen gold. When the court registrar demanded his identification, the suspect fled the court premises in his vehicle from the lawyers’ parking area.
He was subsequently arrested at his home in Onthachimadam on Saturday night. Police recovered fake ID cards, a rubber stamp, lawyer-identifying vehicle stickers, coats, and 16 case files from his possession. The Batticaloa Major Crimes Prevention Division is conducting further investigations.



