Wednesday, November 5, 2025

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கிளம்பிய சண்டை; வெளிப்படும் எப். ஜேவின் உண்மையான முகம்

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம் மாஸ்க் எடுக்கும் டாஸ்க்கில் வெளியில் வர ஆரம்பித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 9

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் களமிறங்கினார். இவரைத் தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்‌ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்களும் போட்டியாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள்.

வெளியில் வரும் எப். ஜேவின் உண்மை முகம்

பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பித்த நாள் முதல் போட்டியாளர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள் ஓயவில்லை. தினம் தினமும் ஏதாவது ஒரு சர்ச்சை வந்துகொண்டே இருக்கிறது. முதல் வார நாமினேஷனில் குறைவான வாக்குகளைப் பெற்று பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரத்திற்கான நாமினேஷன் முடிந்துள்ள நிலையில், அதிகமான போட்டியாளர்களால் வி.ஜே. பார்வதி நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் மாஸ்க்கை எடுத்து உரிய பெட்டியில் வைக்கும் டாஸ்க் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் வேகமாக ஓடிய போட்டியாளர்களைத் தடுக்கும் முயற்சியில் சில போட்டியாளர்கள் ஈடுபட்டனர். இந்தச் சண்டை முடிவில் கானா வினோதிற்கு அதிகமான கோபம் வந்து விடுகிறது.

இதனால், “அப்படித் தள்ளாதீர்கள்” எனப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது எப்.ஜே அவரை மேலும் கடுப்பாக்குவது போன்று நடந்து கொள்கிறார். ஆத்திரமடைந்த கானா வினோத், கோபமாக “ஏய் புளிப்பே..” எனக் கத்தியபடி அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.

இதுபோன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எப்.ஜேவின் உண்மை முகம் வெளியில் வர ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

During a “mask retrieval” task in Bigg Boss Season 9, which premiered grandly on October 5th, the true nature of contestant F.J. began to surface during a heated argument with Gana Vinoth, who was trying to stop contestants from pushing during the task. F.J.’s actions further agitated Vinoth, who angrily shouted “Hey Pulippe” (Hey Sourpuss) at him, highlighting the ongoing conflicts in the house since the season began, following the first week’s eviction of Praveen Gandhi and the current week’s highest nomination of V.J. Parvathi.

Hot this week

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கைபேசி பயன்படுத்த தடை!

இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கைபேசி பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக முன்மொழியப்பட்ட...

Vacancy Branch Manager

🔰 ஊழியர்கள் தேவை 🔰 🔖பிரபல்யமான Courier Service ஒன்றின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி,...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கனடாவில் கிடைத்த கௌரவம்!

கனடாவின் Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக இலங்கை யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட...

கொழும்பு பெண்கள் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்; நம்ப முடியுமா?

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் போதைக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை...

களுத்துறை கடற்கரையில் சந்தேகப் போதைப்பொருள் பொதி கைப்பற்றி மீட்பு!

இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில்,...

Topics

பிலிப்பைன்ஸில் சூறாவளி தாக்கம் – 58 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய 'கல்மேகி' (Kalmaegi) என்ற சூறாவளி காரணமாக பெய்த...

இன்று நாடளாவிய சுனாமி ஒத்திகை!

உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி...

அமெரிக்காவில் புறப்பட்டவுடன் வெடித்து சிதறிய விமானம்!

அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img