வடமாகாணத்திற்குட்பட்ட வன்னிப் பகுதியில் இராணுவத்தினரால் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பில் வடமாகாண அழகு சங்கங்களின் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினரால் நடாத்தப்படும் நிலையங்கள் குறித்த சம்மேளனத்தின் பட்டியல்
வடமாகாண அழகு சங்கங்களின் சம்மேளனம் தங்கள் அறிக்கையில், அமைச்சரின் கூற்றை மறுத்து, இராணுவத்தால் நடாத்தப்பட்டு வரும் பல நிலையங்களைப் பட்டியலிட்டுள்ளது:
-
யாழ்ப்பாணம்: காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்.
-
வவுனியா:
-
பம்பைமடு இராணுவ முகாம்.
-
வவுனியா சிறைச்சாலைக்கு முன்.
-
இரட்டை பெரியகுளம் இராணுவ முகாம்.
-
பரிச்சங்குளம் இராணுவ முகாம்.
-
-
கிளிநொச்சி மாவட்டம்: விசுவமடு புன்னைநீராவியடியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களம் இணைந்த கட்டளைத் தலைமையகம்.
-
முல்லைத்தீவு:
-
முருகண்டி கால்நடைப் பயிற்சி கல்லூரி அடி இராணுவ முகாம்.
-
முருகண்டி எரிபொருள் நிரப்பு நிலையம் அருகாமையிலுள்ள இராணுவ முகாம்.
-
அக்கராயன் முருகண்டி விஷேட படையணி இராணுவ முகாம்.
-
கோப்பாபுலவு கொண்டமடு வீதி 59ம் படைப்பிரிவினுள் மூன்று சிகை அலங்கரிப்பு நிலையங்கள்.
-
-
மன்னார் மாவட்டம்:
-
கள்ளியடி இலுப்பைக்கடவை.
-
திருக்கேதீச்சரம் முள்ளிப்பள்ளம்.
-
சம்மேளனத்தின் கோரிக்கை
இவ்வாறு இராணுவத்தினர் பல சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடாத்துவதால், அங்குள்ள சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும், குறித்த நிலையங்களை மூடுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சம்மேளனம் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
The Northern Province Beauty Associations Federation has issued a strong condemnation following a statement by Minister Bimal Ratnayake in Parliament, where he claimed that the military operates only one barbershop in the Wanni region of the Northern Province.
The Federation’s statement refutes the Minister’s claim by listing numerous barbershops currently run by the military across the Northern Province, including locations in:
-
Jaffna: Kankesanthurai Thondamanaru Road Army Camp.
-
Vavuniya: Pambaimadu, in front of Vavuniya Prison, Irrattai Periyakulam, and Parichankulam Army Camps.
-
Kilinochchi: The Civil Security Department combined command headquarters in Visuvamadu Punaineeraviyadi.
-
Mullaitivu: Murugandy Veterinary Training College Camp, Murugandy Fuel Station Camp, Akkarayan Murugandy Special Forces Camp, and three shops within the 59th Division on Koppapulavu Kondamadu Road.
-
Mannar: Kalliyadi Iluppaikadavai and Thiruketheeswaram Mullipallam.
The Federation warns that the continuation of these military-run operations severely affects the livelihoods of civilian barbers and urgently calls for immediate action to close these establishments.


