நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
The Department of Meteorology has forecast rain or thundershowers in many parts of the country after 1:00 PM today, with some areas in the Western, Sabaragamuwa, Central, Southern, and Uva provinces expected to receive heavy rainfall of up to 100 mm. Additionally, misty conditions are predicted for the mornings in some parts of the Central, Sabaragamuwa, and Uva provinces, and the department has advised the public to exercise extreme caution during thundershowers.