யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள், சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை – தும்பளை வீதிப் பகுதியில் சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வந்த மூன்று இந்தியர்கள், சட்டவிரோதமான முறையில் ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் சட்டவிரோத ஜோதிட நிலையம் இயங்கி வருவது குறித்து தும்பளை கிராம அலுவலர், பருத்தித்துறை நகரசபைத் தவிசாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதன் விளைவாக, நகரசபைத் தவிசாளர் நேற்று நேரில் சென்று நிலைமையை அவதானித்ததுடன், குறித்த இந்தியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனாலும், அவர்களின் அறிவுறுத்தலையும் மீறி ஜோதிட நிலையம் தொடர்ந்து இயங்கி வந்ததை அடுத்து, நகர பிதா வின்சன் டீ டக்ளஸ் போல், பருத்தித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், அந்த இந்தியப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்கள் சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் வந்திருப்பது உறுதியானது.
இதனையடுத்து, சட்டவிரோதமான முறையில் ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த அந்த மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Three Indian nationals, who entered Sri Lanka on tourist visas, have been arrested in Jaffna’s Point Pedro for illegally operating an astrology center on Thumpalai Road. The arrest followed an investigation initiated by the Chairman of the Point Pedro Urban Council, Vincent T. Douglas Paul, after the individuals ignored warnings to cease their unauthorized operation, confirming they were violating their visa conditions by engaging in business activity.


