கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கொட்டாஞ்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கார் ஒன்றில் வந்த நபரொருவர் துப்பாக்கியால் சுட்டே இந்தக் கொலையைச் செய்திருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்று (19) ஹசலக, கொலொங்கொடைப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது, அந்தத் துப்பாக்கிதாரியிடம் இருந்து 12 கிராம் 300 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடையவர் எனவும், கடுவெலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 72 மணி நேரத் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டு, கொழும்பு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The gunman who carried out the fatal shooting in the Kotahena area on November 7th has been arrested by the Colombo Crimes Division (CCD) in possession of “Ice” (Crystal Meth). The suspect, who committed the murder while traveling in a car within the Kotahena Police Division, was apprehended yesterday (19) while hiding in a house in Kolongoda, Hasalaka. Upon arrest, the gunman was found with 12 grams and 300 milligrams of “Ice”. The suspect is a 39-year-old man from Kaduwela and is currently being detained under a 72-hour detention order as the CCD conducts further investigations.



