இலங்கையில் போக்குவரத்துச் சட்டம் இன்று (8) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக, வாகனங்களைச் சோதனையிட நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்துப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இந்தச் சோதனையின்போது, போக்குவரத்திற்குத் தகுதியற்ற வாகனங்கள் மற்றும் நிறம் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் கவனிக்கப்படும்.
அத்துடன், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெவ்வேறு வண்ணங்களில் ஒளிரும் மேலதிக விளக்குகள், முன், பின் மற்றும் இரு பக்கங்களிலும் உள்ள சித்திரங்கள் மற்றும் விளம்பரங்கள், சட்டவிரோதமான மேலதிக உதிரிபாகங்கள் போன்றவற்றையும் சோதனையிட திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் (horn) மற்றும் சைலன்சர்கள் (silencer) பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பாகவும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.
___________________________________________________________________
The Ministry of Transport in Sri Lanka has announced that traffic laws will be strictly enforced starting today, with police deployed nationwide for vehicle inspections. The crackdown will target vehicles that are unfit for transport, have changed colors, or are equipped with illegal modifications such as extra lights, inappropriate designs, advertisements, and loud horns or silencers. Deputy Minister of Transport Prasanna Gunasekara stated that police have been instructed to enforce the law stringently on these offenses.