Wednesday, November 26, 2025

தாழமுக்கமாக மாறும் குறைந்த அழுத்தம்

இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்றின் நிலைமை அடுத்த சில நாட்களுக்குள் (நவம்பர் 25 – 29) மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ வரையான மிகப் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
Low-pressure area to intensify into depression and move towards Tamil Nadu

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்ப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்புள்ளது.

ஏனைய பிரதேசங்களில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கி.மீ வரை மிக அதிகரிகக்கூடும்.

இதன் விளைவாக, கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

எனவே, மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் நாளை (நவம்பர் 26) முதல் மறு அறிவித்தல் வரும் வரையில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதைத் முற்றாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நவம்பர் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையில் நிலவவுள்ள இந்த மோசமான வானிலை குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அவசர உதவிகள் தேவைப்பட்டால் உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The Department of Meteorology predicts that a low-pressure area currently situated south of Sri Lanka is expected to intensify into a depression within the next 30 hours, leading to a severe escalation of rain and wind conditions between November 25th and 29th. Very heavy rainfall exceeding $150 \text{ mm}$ is expected in parts of Eastern, Central, and Uva provinces and Polonnaruwa district, with heavy rain exceeding $100 \text{ mm}$ elsewhere, alongside strong winds up to $50 \text{ km/h}$. Sea areas will be very rough with gusts up to $60-70 \text{ km/h}$, and fishermen and mariners are advised to avoid naval activities from November 26th until further notice.

Hot this week

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...

காதலனின் வீட்டில் 8 பவுண் நகை திருடிய காதலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின்...

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

Topics

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...

காதலனின் வீட்டில் 8 பவுண் நகை திருடிய காதலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின்...

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img