கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை விபத்திற்குள்ளானது.
அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
A private luxury passenger bus travelling from Colombo to Mannar met with an accident early today (the 22nd) in the Periyakattu area on the Mannar – Madawachchi main road. The bus reportedly lost control and veered off the road. Several people were injured in the incident and have been admitted to the Cheddikulam Hospital. Police are currently at the scene conducting investigations.