Sunday, September 28, 2025

மதரசா கழிவறைக்குள் 40 சிறுமிகள் பூட்டி வைப்பு; அதிகாரிகள் அதிர்ச்சி விபரீதம்!

இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகிலுள்ள பகல்வாரா கிராமத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மதரசா செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, பயாக்பூர் துணை ஆட்சியர் அஸ்வினி குமார் பாண்டே தலைமையில் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அங்கு ஆய்வு நடத்தச் சென்றனர். அப்போது அதிகாரிகள் மாடிக்குச் செல்வதை மதரசா நடத்துபவர்கள் தடுக்க முயன்றனர்.

எனினும், பொலிஸார் உதவியுடன் அதிகாரிகள் அந்தக் கட்டிடத்தில் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது மாடியில் இருந்த கழிப்பறை ஒன்று பூட்டப்பட்டிருந்தது கவனிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெண் பொலிஸார் அந்தக் கதவைத் திறந்து பார்த்தபோது, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 40 சிறுமிகள் ஒருவர் பின் ஒருவராகக் கழிப்பறையில் இருந்து வெளியே வந்தனர்.

மதரசா வளாகத்தில் 8 அறைகள் இருக்கும்போது, சிறுமிகள் கழிப்பறைக்குள் பூட்டப்பட்டிருந்தது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அங்கிருந்த ஆசிரியை ஒருவர், சிறுமிகள் பீதியடைந்து தாங்களாகவே கழிப்பறைக்குள் பூட்டிக்கொண்டதாகக் கூறினார்.

அந்த மதரசா அரசின் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, அதை மூடவும், சிறுமிகளைப் பத்திரமாக அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். மதரசா கழிவறைக்குள் சிறுமிகள் பூட்டப்பட்டிருந்த இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

___________________________________________________________________

In Bahraich district, Uttar Pradesh, India, authorities inspecting an illegally operating madrasa found 40 girls aged 9 to 14 locked inside a bathroom. The inspection, prompted by continuous complaints, was initially obstructed by the madrasa operators. After police intervention, the locked bathroom was opened. An attending teacher claimed the girls locked themselves in out of panic, despite there being eight rooms available. Following the discovery that the madrasa was operating without government permission, officials ordered its immediate closure and ensured the safe return of the girls to their homes.

Hot this week

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு லாபம் வருமானம் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

மரத்தில் மோதி வேன் கோர விபத்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம்...

நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி பெண் உயிரிழப்பு; பரபரப்பு.!

நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில்...

அதிகாலையில் தனியார் இரு பேருந்துகள் மோதி விபத்து பயணிகளின் நிலை என்ன?**

இன்று (27) அதிகாலை பூகொடை-தொம்பே வீதியில் தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு...

இலங்கைக் கணவனுடன் வந்த இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி வெளியான தகவல்!

திருகோணமலை, உப்புவெளி பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பெண்ணின் ரூ....

Topics

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; சம்பவம் குறித்து விசாரணை!

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை -...

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்; பதற்றம்!

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img