Thursday, October 23, 2025

கல்வி நடவடிக்கைகளில் வரும் பெரிய மாற்றங்கள்

அடுத்தாண்டு அமுலாகவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலான பூர்வாங்க ஆலோசனைக் கோவை ஒன்றை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன் பிரகாரம், ஒன்பது துறைகள் சார்ந்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் தாய்மொழி, ஆங்கில மொழி, இரண்டாவது தேசிய மொழி, கணிதம், சமயம் மற்றும் ஒழுக்கக் கல்வி, ஆரம்ப கல்வி மற்றும் சுற்றாடல்சார் செயற்பாடுகள், ஒன்றிணைந்த அழகியல் கல்வி, சுகாதார மற்றும் உடற்கல்வி போன்றவை அவற்றுள் சிலவாகும்.

பாடத்திட்டத்தில் மாற்றம்

அடுத்தாண்டு தொடக்கம் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டுகளுக்குரிய பாடசாலை நேரத்தில் மாற்றம் இல்லை.

எனினும், ஐந்தாம் வகுப்புக்குரிய கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30 இற்குக் தொடங்கி பிற்பகல் இரண்டு மணி வரை நீடிக்கும். ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலை முடியும் வரையில் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும்.

தரம் ஆறு தொடக்கம் உயர்தர வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்பகல் இரண்டு மணி வரை நடைபெறும். நாளாந்த பாடசாலை நேரம் 50 நிமிடங்களைக் கொண்ட ஏழு காலப்பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

தேசிய கல்வி நிறுவகம்

பாடசாலை நேரசூசியைத் தயாரித்தல், பாடசாலை நடத்தப்பட வேண்டிய நேரம் பற்றிய சுற்றுநிருபம் விரைவில் வெளியாகவுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளுக்கான ஆலோசனைகளும் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆறாம் வகுப்பில் இருந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT), வாழ்க்கைக்கான தொழில்நுட்பம், தொழில் முயற்சியாண்மை மற்றும் நிதி எழுத்தறிவு ஆகிய விடயங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

ஆறாம் வகுப்புப் பிள்ளைகளுக்கான பழைய பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களுக்குப் பதிலாக புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் தேசிய கல்வி நிறுவகம் தொகுத்த ‘மொடியூல்கள்’ (Modules) விரைவில் வழங்கப்படவுள்ளன.


The Ministry of Education, Higher Education, and Professional Education has released a preliminary consultation draft regarding the new educational reforms to be implemented next year. The curriculum is structured around nine subject areas, including Mother Tongue, English, Second National Language, Mathematics, Religion and Moral Education, Primary Education and Environmental Activities, Integrated Aesthetic Education, and Health and Physical Education.

Key Changes to School Timetable:

  • School times for Grades 1, 2, 3, and 4 will remain unchanged.
  • Grade 5 classes will run from 7:30 AM to 2:00 PM, and primary teachers must remain in school until closing time.
  • Grades 6 up to Advanced Level classes will also conclude by 2:00 PM, with the daily school schedule divided into seven 50-minute periods.

New Subject Introductions:

  • From Grade 6, subjects like Information and Communication Technology (ICT), Technology for Life, Entrepreneurship, and Financial Literacy will be introduced.
  • The National Institute of Education (NIE) will soon provide ‘Modules’ compiled to suit the new curriculum for Grade 6 students, replacing old textbooks.
  • Circulars regarding school timetables and operational hours, along with guidelines for Muslim schools, will be issued soon.

Hot this week

Vacancy Female office employees

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை வயது...

யாழில் நிமோனியா தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

ஒருநாள் காய்ச்சல் காரணமாக யாழில் நேற்றையதினம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடி...

கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர்களுக்கு அதிர்ச்சி: கைப்பேசிகள் மர்மமாக மாயம்

அக்குறணையில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத்...

பாராளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு சோதனை நடைமுறைப்படுத்தப்பட்டது

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்...

110 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம்...

Topics

Vacancy Female office employees

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை வயது...

யாழில் நிமோனியா தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

ஒருநாள் காய்ச்சல் காரணமாக யாழில் நேற்றையதினம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடி...

கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர்களுக்கு அதிர்ச்சி: கைப்பேசிகள் மர்மமாக மாயம்

அக்குறணையில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத்...

பாராளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு சோதனை நடைமுறைப்படுத்தப்பட்டது

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்...

110 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம்...

இன்று 75 மில்லிமீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப்...

திருமண மறுப்பு காரணமாக அண்ணியாரின் அதிர்ச்சி செயல்; குடும்பம் பரபரப்பு

தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம்...

விபச்சார விடுதியில் சிக்கிய குடும்பப் பெண்கள் கைது

கேகாலை - வரக்காப்பொல நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img