அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக ‘சுய கற்றல் கையேடுகள்’ வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தச் சுய கற்றல் கையேடுகள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றத்தின் விளைவாக, குறித்த தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாடசாலைப் பைகளின் எடையும் கணிசமாகக் குறைக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
The Ministry of Education has announced that during the next academic year, students in Grade 1 and Grade 6 will not receive traditional textbooks; instead, they will be provided with ‘Self-Learning Handbooks’ as part of new educational reforms. Deputy Minister of Education, Madura Senaviratne, stated that these handbooks are currently being printed, and this change is expected to significantly reduce the weight of the students’ school bags.