முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் 4.7 கிலோ அளவிலான வெடிபொருட்கள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (22.12.24) முல்லைத்தீவு பொலிஸாரின் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
தற்போது, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முல்லைத்தீவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.