மஹியங்கனைப் பொலிஸாரால் மனிதக் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும், பெண் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹியங்கனை, சங்கபோபுரப் பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான ஒருவர் காணாமல் போனதாக கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி மஹியங்கனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவரது மோட்டார் சைக்கிள் ஒக்டோபர் 21ஆம் திகதி வியன்னா ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
அதேபோல், அவரது சடலம் மூன்று நாட்களுக்குப் பின்னர், அதாவது கடந்த 24ஆம் திகதி, கிராந்துருகோட்டை, உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது. இது சந்தேகத்திற்கிடமான மரணமாக இருந்ததால், பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

கொலைக்கான காரணம்
இந்நிலையில், நேற்று (19) ஒரு நபர் மஹியங்கனைப் பொலிஸ் நிலையத்திற்கு வந்து குறித்த மரணம் ஒரு மனிதக் கொலை என்று கூறியுள்ளார். அவர் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இறந்தவரின் மனைவிக்கும் தனக்கும் இடையில் இருந்த கள்ள உறவுக்கு இறந்தவர் தடையாக இருந்ததால், இறந்தவரின் மனைவியின் சம்மதத்துடன் தான் மற்றொருவருடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்படி, அந்த நபரும் இறந்தவரின் மனைவியும் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்போபுரப் பிரதேசத்தைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 55 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்ட பெண் 42 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மஹியங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mahiyangana Police have arrested a male suspect and a female suspect in connection with a murder case. The case originated with a missing person report filed on October 17th for a 51-year-old man from Sanghabopura, Mahiyangana. His motorcycle was found in the Vienna River on October 21st, and his body was recovered from the Ulhitiya Reservoir near Girandurukotte on the 24th.
The investigation intensified when a man came to the police station yesterday (19) and confessed that the death was a murder. He admitted that the victim was killed because he was an obstacle to the illicit affair between the confessing suspect and the victim’s wife, claiming the murder was carried out with the wife’s consent and with the help of a third person. The confessing suspect (aged 55) and the victim’s wife (aged 42) have been arrested. Mahiyangana Police are conducting further investigations to apprehend the third suspect involved in the crime.


