வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான வசதிகளை வழங்கும் நோக்குடன் புதிய செயலி (App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வின் போதே, இந்தச் செயலி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தால், அவரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை 06 இலட்சம் ரூபாயிலிருந்து 20 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தச் சூழலில், பயிற்றப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் மிக முக்கிய பொறுப்பு எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், பெறுமதியான, சந்தையில் கேள்வித்தன்மை கூடிய மனித வளத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
A new mobile application has been introduced to enhance facilities for Sri Lankans working abroad, launched during the 40th anniversary celebration of the Foreign Employment Bureau. Concurrently, the government has increased the insurance compensation paid to the families of overseas workers who die from Rs. 600,000 to Rs. 2,000,000. Prime Minister Harini Amarasuriya emphasized that the government’s responsibility is to create trained foreign workers and develop valuable human resources with high market demand.



