ஒளிரும், மென்மையான சருமம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? இந்த அழகான சருமத்தைப் பெறுவதற்காக பலர் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்கின்றனர். இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில், நாம் தினமும் வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற சருமப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை முகத்தின் பொலிவை வெகுவாகக் குறைத்துவிடுகின்றன. ஆனால், இந்த பிரச்சினைகளை நாம் கடலை மாவைப் பயன்படுத்தி மிக எளிதாகச் சரிசெய்யலாம்.
கடலை மாவை மட்டும் பயன்படுத்துவது போதாது. அதனுடன் சில பொருட்களைச் சேர்த்து பயன்படுத்தும்போதுதான், அது முகத்தின் பொலிவை அதிகப்படுத்தும். அப்படியான சில எளிதான வழிகளை இப்போது பார்ப்போம்.
கடலை மாவு & தயிர்
2 ஸ்பூன் கடலை மாவுடன் 1 ஸ்பூன் தயிர் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், முகம் பொலிவு பெறும்.
கடலை மாவு & மஞ்சள்
2 ஸ்பூன் கடலை மாவுடன் கால் ஸ்பூன் மஞ்சள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். கடலை மாவுடன் மஞ்சள் சேர்ப்பது முகத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், பருக்களையும் நீக்கும்.
கடலை மாவு & ரோஸ் வாட்டர்
2 ஸ்பூன் கடலை மாவுடன் 1-2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து ஃபேஸ் பேக் போல கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இது முகத்திற்குப் புத்துணர்ச்சியையும், நல்ல ஈரப்பதத்தையும் கொடுக்கும்.
கடலை மாவு & தேன்
கடலை மாவு மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மாற்றுகிறது. அத்துடன் முகத்தை பளபளப்பாக்குவதுடன், கரும்புள்ளிகள் மற்றும் கறைகளையும் நீக்குகிறது. இதற்கு 2 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
_______________________________________________________________________
This article explains how to use gram flour (கடலை மாவு) with other natural ingredients to achieve glowing and soft skin, which is often affected by acne, blackheads, and dryness due to daily exposure. The text provides four different face pack recipes: gram flour with yogurt and lemon juice for a natural glow, gram flour with turmeric to reduce acne, gram flour with rose water for freshness and hydration, and gram flour with honey and lemon juice to moisturize and remove blemishes. These simple, homemade remedies are presented as a cost-effective alternative to expensive skincare products.