Wednesday, October 22, 2025

வவுனியா மாநகர சபையின் செயல்பாடுகள் தடை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு வெளியிட்டது

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து செவ்வாய்க்கிழமை (21) தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

மாநகர சபை ஆட்சி

வவுனியா மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு கோரப்பட்டபோது, ஜனநாயக தேசிய முன்னணியின் போனஸ் ஆசனத்தினால் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் என்பவர் பிரதி மேயர் பதவி கோரி ஆதரவளித்திருந்தார்.

எனினும், அவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில் வசித்த நிலையில் மாநகர சபையில் போட்டியிட்டமை, அதனூடாகப் பதவியைப் பெற்றமை என்பன சட்ட விதிகளுக்கு மீறிய செயற்பாடு எனக் குற்றம் சாட்டி, மாநகர சபை உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் க. விஜயகுமார் மற்றும் சுயேச்சை குழு உறுப்பினரான பிரேமதாஸ் சிவசுப்பிரமணியம் ஆகியோர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இதன் பிரகாரம், கடந்த நான்கு தவணைகளின் பின்னர் நேற்று (21) நீதிமன்றத்தினால் மேற்குறித்த (சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை) அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்குத் தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The Court of Appeal issued an interim injunction on Tuesday (the 21st), suspending the council proceedings of the Vavuniya Municipal Council until the 19th of next month. This decision stems from a petition filed by two councillors, K. Vijayakumar (National People’s Power) and Premadas Sivasubramaniam (Independent Group), arguing that Deputy Mayor Parameswaran Karthipan (elected via a bonus seat) was not legally eligible to contest or hold office in the Municipal Council as he resided outside its boundaries, within the Valaithottam Tamil Pradeshiya Sabha area. President’s Counsel Saliya Pieris appeared in court on behalf of the petitioners.

Hot this week

திருமண மறுப்பு காரணமாக அண்ணியாரின் அதிர்ச்சி செயல்; குடும்பம் பரபரப்பு

தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம்...

விபச்சார விடுதியில் சிக்கிய குடும்பப் பெண்கள் கைது

கேகாலை - வரக்காப்பொல நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி...

நாட்டில் மரக்கறிகளின் விலை உச்சத்தை எட்டும் நிலையில் உள்ளது

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில்...

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவிக்கு ஏற்பட்ட விபத்து; பரிதாபமாக உயிரிழப்பு

நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

யாழில் போதைப்பொருள் பழக்கத்தால் இளம் பெண் உயிரிழப்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான...

Topics

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...

மன்னார்–மதவாச்சி பிரதான சாலையில் சொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று...

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடந்த பெரும் கொடூரம்; துயரில் கதறும் குடும்பம்

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img