சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அனைத்து சங்கங்களும் கூடிப் பேசிய பின்னர், இன்று பிற்பகல் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
______________________________________________________________________
The Sri Lanka Electricity Board’s Electrical Technical Experts’ Union has announced that their “work-to-rule” protest will continue until midnight today (24th). Union President Kosala Abeysinghe stated that a final decision on future union action will be made this afternoon after a meeting with all relevant unions.


