கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஹுது மாவத்தையிலுள்ள ராமகிருஷ்ணா மிஷனுக்கு அருகில் ரயிலிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஹுது மாவத்தையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனுக்கு அருகில், ரயிலிலிருந்து தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (ஒக்டோபர் 01) இடம்பெற்றுள்ளது. பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்தே அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் பிலியந்தலையைச் சேர்ந்த 66 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
A 66-year-old man from Piliyandala died after falling from a train traveling from Beliatta to Anuradhapura near the Ramakrishna Mission on Muhudu Mawatha in the Wellawatte Police Division, Colombo, yesterday (October 1). Wellawatte Police are currently conducting further investigations into the incident.