தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடையே நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மேலும், வெளியிலே சென்று விளையாடாமல் இருப்பது, மற்றும் நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்ற பழக்கவழக்கங்கள் இந்த நிலைமையை இன்னும் அதிகமாக மோசமடையச் செய்வதாக அமைகிறது என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
மதுரை அரச மருத்துவமனையின் நிபுணர்கள் நடத்திய ஆய்விலேயே இந்தத் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்றுக்குப் பிறகு நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விடப் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
A recent study conducted by experts at Madurai Government Hospital revealed a worrying increase in diabetes among adolescents, primarily linked to the excessive use of television and mobile phones. The lack of outdoor play and walking further exacerbates this condition. The study noted a significant rise in diabetes cases following the COVID-19 pandemic compared to the prevalence a decade ago.


