பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களைத் தவிர்க்க, பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பதற்கு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:
- “6 ஆம் தரத்திற்காக, வயதுக்கு ஏற்ற வகையில் ஒரு புத்தகத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்.
- பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு, குறிப்பாகக் குடும்பநல சுகாதாரப் பிரிவு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
- நம் நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்குப் பிள்ளைகள் உள்ளாகும் போக்கு அதிகரித்து வருவதால், இதிலிருந்து பாதுகாக்க பிள்ளைகளுக்கு இது பற்றிக் கற்பிக்க வேண்டும் என்று குடும்பநல சுகாதாரப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சு தொடர்ந்து எங்களிடம் கூறி வருகின்றன.
- அதேபோல், இது ஒரு பாரதூரமான பிரச்சினை என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் எங்களிடம் கூறியுள்ளது. தங்களது உடலைப் பாதுகாத்துக் கொள்வது குறித்துப் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
- இது குறித்து அந்தந்த அமைச்சுகள் மற்றும் அதிகார சபைகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். அவர்களின் பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- எந்த வயதில், எவ்வாறு, எப்போது இதை அறிமுகப்படுத்துவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
- இந்தக் கலந்துரையாடல்களின்படி, பிள்ளைகளுக்குத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய விதம் மற்றும் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வயதுக்கு ஏற்ற வகையில் சரியான கல்வி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
- இந்தக் விடயங்களை நாங்கள் சுகாதாரத் துறையின் நிபுணர்களின் ஆலோசனையின்படியே செய்வோம்.” என்றார்.
Prime Minister Dr. Harini Amara Suriya stated that an age-appropriate sexuality education system must be introduced to children to prevent sexual abuse and harassment.
She made this remark while addressing the public representatives of the Kandy District during a program held under her leadership to brief them on the new educational reforms. The Prime Minister added that plans related to this would be formulated after obtaining the recommendations and advice of experts.
Key points from the Prime Minister’s speech:
- Necessity: The Ministry of Health, particularly the Family Health Bureau, and the Child Protection Authority are constantly urging the introduction of sexuality education due to the increasing trend of sexual abuse and harassment faced by children in the country.
- Goal: The goal is to educate children on how to protect their bodies and understand the changes occurring in their bodies in an age-appropriate manner.
- Current Status: A textbook has been prepared for Grade 6 in an age-appropriate manner. However, no decision has been made yet on the specific age, method, or time of introduction of the full curriculum.
- Process: The Ministry is currently consulting with the relevant Ministries and Authorities, and the implementation will strictly follow the advice of experts in the health sector.
Would you like more information on the new educational reforms being discussed?



