உடலுறவு கொள்ளாமலேயே ஜெயில்ல இருக்குற ஒரு லேடி, ஒரு குழந்தையை பெற்றெடுத்த கதை தெரியுமா உங்களுக்கு?
மேல் தளத்துல ஒரு சிறை கைதி இருந்திருக்கான். அவன் பேரு மைக். அவனுக்கு சரியா கீழே இருக்கிற ரூம்ல ஒரு பெண்ணை அடைச்சிருக்காங்க. அவங்க பேரு ஆஷ்லி.. அவங்க இருந்த ரூம்ல ஒரு சின்ன vent shaft (குட்டி ஜன்னல் மாதிரி) இருந்திருக்கு. அது வழியா இந்த பெண்ணுக்கு ஏதோ வினோதமான சத்தம் கேட்டிருக்கு…
அந்த ஜன்னல்கிட்ட இந்த லேடி காது வச்சு கேட்கும்போது, அது மூலமா மேல் தளத்துல இருக்கிற மைக், ஏதோ பேசுற சத்தம் கேட்டு இருக்கு…
இவங்க அந்த குட்டி ஜன்னல் வழியா பேச, மைக் அதைக்கேட்டுட்டு அவங்களுக்கு திருப்பி பதில் சொல்லி இருந்திருக்காரு. இப்படியே தினமும் அவங்க ரெண்டு பேரும் அந்த ஓட்டை வழியாகவே பேசிட்டு இருந்திருக்காங்க…
சின்ன கம்பியை அது வழியா நுழைச்சி லெட்டர் பாஸ் பண்றது, பெட்ஷீட்டை சுருட்டி அதுக்குள்ள விட்டு நியூஸ் பாஸ் பண்றதுன்னு டெய்லியும் பேசிட்டே இருந்திருக்காங்க. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமா இவங்க இப்படியே ஒருத்தர ஒருத்தர் பாக்காமலே பேசிட்டு இருக்காங்க.
ஒரு கட்டத்துல இரண்டு பேருக்கும் புடிச்சு போயிடுது. “நாம ஏன் ஒரு குழந்தை பெத்துக்கக்கூடாது?” அப்படின்னு ஒருவிபரீதமான முடிவை எடுக்குறாங்க.
“நேர்ல மீட் பண்ணாம எப்படி குழந்தை பெத்துக்க முடியும்?” அப்படின்னு யோசிக்கும்போது, மைக் ஒரு வித்தியாசமான ஐடியாவை சொல்றாரு..
ஒரு பிளாஸ்டிக் கவரை திருட்டுத்தனமா அந்த ரூமுக்குள்ள கொண்டு வந்து, தன்னோட உயிரணுவை அந்த பிளாஸ்டிக் கவர்ல சேகரிக்கிறாரு.. அதை, அந்த குட்டி ஜன்னல் வழியா மேல இருந்து கீழ அனுப்புறாரு. அந்த பிளாஸ்டிக் கவரை ரிசீவ் பண்ணி, அந்த பெண்ணும் குழந்தை பெத்துக்குற ப்ராசஸ்ல ஈடுபடுறாங்க.. இந்த மாதிரி நிறைய நாள் பண்ணிட்டே இருந்திருக்காங்க.. இவங்க டெய்லி இதை பண்ணதோட விளைவா, ஒரு நல்ல சுபமுகூர்த்த நாள்’ல அந்த பெண் கர்ப்பம் ஆகுறாங்க..
சிறையில அதை யாருக்கும் தெரியாம மறைச்சி வைக்கிறாங்க.. அவங்க கர்ப்பமா இருக்காங்க அப்படிங்கிற நியூஸ் ஒரு காலகட்டத்துக்கு அப்புறமா சிறை நிர்வாகத்துக்கு தெரிய வருது.. அப்புறம் என்ன?
. நிஜ வாழ்க்கை, நீங்க கற்பனை பண்றதை விட சுவாரஸ்யமானதுன்னு சும்மாவா சொன்னாங்க.. இப்படி ஒரு சீனை படத்துல கூட யோசிக்க முடியாது..