கனடா தலைநகரில், புதிதாக திறக்கப்பட்டுள்ள மளிகைக்கடை ஒன்றில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள்வரை வரிசையில் நின்ற ஒரு காட்சி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவிலுள்ள Barrhaven என்ற இடத்தில் புதிதாக ஒரு மளிகைக்கடை திறக்கப்பட்டுள்ளது. அந்தக் கடையில் உள்ள சாதாரண வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்காக, அங்கே மக்கள் திரண்டு வரிசையில் நின்ற காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில், அந்த வரிசையில் நின்றவர்களில் பெரிய பொறுப்புகளில் இருந்தவர்களும் அடங்குவர்.
அந்த வரிசையில் நின்றவர்களில் கேசி மெக்லாலின் (Casey McLaughlin) என்பவரும் ஒருவர். இவர் இதற்கு முன்னர் யுகோன் போக்குவரத்து அருங்காட்சியகத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது! இன்று அவர் கூறுகையில், “வீட்டு வாடகை கொடுக்க வேண்டும், மின்கட்டணம் செலுத்த வேண்டும், அதற்கெல்லாம் பணம் தேவை. எனவே, இப்போது மளிகைக் கடையில் வேலை செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அதேபோல, வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக வரிசையில் நின்ற மற்றுமொருவர் நஃபீசா இஜி (Nafisa Ijie). இவர் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, இங்கிலாந்திலும், நைஜீரியாவிலும் பிசினஸ் அனாலிஸ்டாகப் பணியாற்றியவர். “எவ்வளவு படித்திருந்தாலும், பணி அனுபவம் இருந்தாலும், கனடாவில் பணி செய்த அனுபவம் இல்லையென்றால் இங்கு வேலை கிடைப்பது மிகவும் கடினம். அதனால், எதாவது ஒரு சிறிய வேலையில் இருந்து துவங்க வேண்டியதுதான்” என்று நஃபீசா தனது நிலையை விளக்குகிறார்.
கனடா புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை வீதம் 7.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது. இந்தச் சூழலில், The Dais என்ற ஆய்வமைப்பின் ஆய்வாளர் வியட் வூ (Viet Vu) என்பவர், “ஒருவர் வேலையை விட்டால், அடுத்த வேலை கிடைக்கும்வரை சுமார் ஆறு மாதங்கள் வரை வேலையில்லாமல் இருப்பது சாதாரணமானதுதான்” என்கிறார். இருப்பினும், மக்கள் அந்த ஆறு மாதங்களுக்கும் வாடகையையும், மின்கட்டணத்தையும் செலுத்தாமல் இருக்க முடியாதே! இதுவே இவர்களின் தற்போதைய அவல நிலையாகும்.
A striking scene in Ottawa, Canada, showed a long line of highly qualified individuals, including a former museum Executive Director and an experienced Business Analyst, applying for jobs at a newly opened grocery store. This highlights the severe employment crisis in the country, where the unemployment rate rose to 7.1% in August, forcing even experienced professionals to seek low-level jobs simply to afford rent and basic necessities, despite the common suggestion that a six-month job search gap is normal.