எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள், இலங்கை மின்சார சபையினால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி இறுதியாக மின்சார கட்டணத்தில் 15% குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.
எனினும், மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
_______________________________________________________________________
The Ceylon Electricity Board (CEB) has submitted a proposal to the Public Utilities Commission of Sri Lanka (PUCSL) for a revision of electricity tariffs for the next three months. This comes after a 15% tariff reduction was implemented on June 12. However, CEB trade unions have expressed strong opposition to another potential electricity tariff increase.