Monday, November 24, 2025

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற இலங்கையர் மேற்கொண்ட மோசமான செயல்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்றில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது, 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட அதிக நச்சுத்தன்மை கொண்ட கஞ்சா அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் 45.400 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா மற்றும் சைலோசைபின் (Psilocybin) அல்லது மேஜிக் காளான்கள் என அழைக்கப்படும் 6 கிலோகிராம் காளான்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

500 மில்லியன் இந்திய ரூபாய்

தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கை நடைபெறுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, கொழும்பில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு 9 ஆம் திகதி வந்த இரண்டு நபர்களை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, அவர்களின் உடைமைகளில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல விவரங்கள் தெரியவந்ததாகக் கூறப்படுகின்றது.

அதன்படி, இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஒரு இலங்கையரே மேற்கொண்டதுடன், அவர் வேறொரு விமானத்தில் வந்தபோது இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 

An Eelam (Sri Lankan) national has been arrested in India as part of a drug trafficking operation where authorities seized hydroponic cannabis (45.400 kg) and magic mushrooms (6 kg), collectively valued at over 500 million Indian Rupees. The arrests, initiated based on a tip-off about trafficking from Thailand via Sri Lanka, began with the apprehension of two individuals arriving from Colombo at Kempegowda Airport on the 9th, and subsequent interrogation led to the arrest of the main Sri Lankan perpetrator who arrived on a different flight; the Narcotics Control Bureau (NCB) has launched further investigations.

Hot this week

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

Topics

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரைக் கொல்ல திட்டமிட்டவர் கைது

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத்...

பேருந்துகளில் வங்கி அட்டை கட்டணம் இன்று முதல் ஆரம்பம்

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள்...

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் பலி

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img