இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள மதுபானசாலைகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுபானங்கள் கலப்படம் செய்து விற்கப்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது கலப்படம் செய்யப்பட்ட மதுபானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அறிய முடிகிறது.
விலை உயர்ந்த மதுபான போத்தல்களில் மலிவான மதுபானம் மற்றும் தண்ணீர் கலந்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவ்வாறான மதுபானசாலைகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Excise Department officials in Delhi, India, conducted raids on liquor stores in the Narela area today following complaints that alcohol was being adulterated and sold. During the operation, officials reportedly seized adulterated liquor. It was discovered that cheap alcohol and water were being mixed and sold in bottles of expensive liquor. Legal action has been initiated against the establishments involved in this practice.


