யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை, தாயின் கண் முன் நிர்வாணமாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், 11 மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்குப் பொலிஸார் பல தடவைகள் முயன்ற போதிலும், வடமாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளின் தலையீடுகள் காரணமாக கைது செய்ய முடியாமல் பொலிஸார் திண்டாடி வந்த நிலையில், நேற்றைய தினம் (புதன்கிழமை, நவம்பர் 05) திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரைச் சந்தேகநபர் பார்வையிட வந்த வேளை பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த பிரதான சந்தேகநபருக்கும் வடமாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் காணப்பட்டமையால், சந்தேகநபரை கைது செய்வதற்கு அதிகாரிகள் தடையேற்படுத்தி வந்தனர் எனவும், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சந்தேகநபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்று சிவில் உடையில், தனியார் ஒருவரின் முச்சக்கர வண்டியில் சந்தேகநபரை கைது செய்வதற்குப் பொலிஸ் குழு சென்ற வேளை சந்தேகநபர் தப்பி சென்றிருந்த நிலையில், தனியாருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியில் சிவில் உடையில் பொலிஸார் பயணித்தமை தொடர்பில் விசாரணைகள் நடாத்தி பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பின்னணி: இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி, இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி, சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
The main suspect involved in the shocking incident in Jaffna, where a youth was stripped naked and tortured in front of his mother, has been arrested after 11 months.
Despite multiple attempts to arrest the suspect, police faced difficulties due to the alleged interference of senior police officials in the Northern Province. The suspect was finally apprehended by the Police Intelligence Unit yesterday (Wednesday, November 05) when he visited a private hospital patient in the Thirunelveli area.
The arrested individual is currently being detained and interrogated at the Kopay Police Station and is scheduled to be produced before the Jaffna Magistrate’s Court today (Thursday).
It is reported that close ties existed between the main suspect and high-ranking police officials in the North, leading to obstructions in the arrest process. The report also highlights a past instance where a police team, acting in civil clothes and using a private trishaw to arrest the suspect, was subsequently pressured through an inquiry regarding their use of the private vehicle after the suspect had managed to escape.
Background: The incident took place on January 20th due to a dispute between two families, where a youth from the Inuvil area was stripped, tortured, tied up, and severely beaten in front of his mother.
Would you like to know the current status of the legal proceedings against the arrested suspect?


