Thursday, October 16, 2025

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில் இறங்கியதால், கிராம மக்கள் அவரைத் திருடன் என நினைத்து அடித்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த அந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர், ரொச்சில்ட் தோட்டத்தில் வசிக்கும் 34 வயதுடைய, திருமணமாகாத ராமச்சந்திரன் புவனேஸ்வரன் முரளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொடுரமாகத் தாக்கிய மக்கள் விடுமுறை கிடைக்கும்போதெல்லாம் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திக்க வீட்டிற்கு வருவதை அந்த இளைஞன் வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பவ தினத்தன்று, கடந்த 6ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து வந்த அவர், பேருந்தில் உறங்கியதால் இறங்க வேண்டிய இடத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டார்.

பின்னர், அதிகாலை 2 மணியளவில் நுவரெலியா செல்லும் வழியில் ரம்பொடையில் இறங்கியுள்ளார். வீட்டிற்குச் செல்ல பேருந்து இல்லாததால், அந்தப் பகுதியிலுள்ள தனது அத்தையின் வீட்டிற்குச் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது, வழியை மறந்து வேறு ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதனால், அந்த வீட்டார் ‘திருடன்’ என சத்தம் போட, அருகிலிருந்த மக்கள் வந்து அந்த இளைஞனை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

சடலமாக மீட்பு தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் இது குறித்து தனது உறவினர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில், அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். ஆனால், அங்கிருந்த மக்களின் முன்பாக, உறவினர்களும் தங்களுக்கு அந்த இளைஞனைத் தெரியாது என மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அந்த இளைஞனை மேலும் கடுமையாகத் தாக்கி, கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்னர், அவரது நண்பர்கள் அவரை முச்சக்கர வண்டியில் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, அவர் மிகவும் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்தச் சம்பவங்களால் மனவேதனை அடைந்த முரளி, தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

A 34-year-old man named Ramachandran Puvaneswaran Murali tragically took his own life after being brutally beaten by villagers who mistook him for a thief. The incident occurred when he got off a bus at the wrong place late at night and mistakenly knocked on a villager’s door. The villagers, thinking he was a thief, assaulted him and filmed the incident, sharing the video on social media. After being handed over to the police and then picked up by friends, the deeply distressed man reportedly committed suicide by hanging himself at his home.

Hot this week

Vacancy; அலுவலக பெண் பணியாளர்கள் தேவை

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை வயது...

Bigg Boss Tamil 9; கம்ருதினால் வெட்கப்பட்ட பார்வதி—பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக் பாஸில் பார்வதியும் கம்ருதினும் ஒருவருக்கொருவர் மார்க் போட்டு பேசிய விடயங்கள்...

வரதட்சணையை மறுத்த மனைவிக்கு கணவரின் அதிர்ச்சி செயல்; கோவிலில் பரபரப்பு கடிதம் மீட்பு

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர்...

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை செய்தவர்களுக்கு கடும் அபராதம் விதிப்பு

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட...

யாழில் புதிய வகை திருட்டு சம்பவம்; விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா...

Topics

Vacancy Cake Bakers

Luxury cake Vavuniya Vacancy Open (Female) Experience in icing cake...

பேருந்துகளில் பயணச்சீட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217...

தமிழர் பகுதியில் உழவியந்திரம்–டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து

கிளிநொச்சி - பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த உழவியந்திரமும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img