டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 434 அவசரமாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. நேற்று (20) இரவு இந்த அவசரத் தரையிறக்கம் இடம்பெற்றதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
பயணிக்கு திடீரென உடல்நலக் குறைவு
விமானத்தில் பயணித்த ஒருவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே இந்தத் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பின், அந்தப் பயணி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான இந்த A380 வகை விமானம் நேற்று இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் மீண்டும் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
An Emirates Airlines flight EK-434, traveling from Dubai to Brisbane, Australia, made an emergency landing at the Katunayake Airport last night (20). The unscheduled landing was necessitated by a sudden medical emergency involving a passenger onboard. The unwell passenger was subsequently transferred to the hospital for further treatment. The A380 aircraft, one of the world’s largest passenger planes, landed at 7:15 PM and resumed its journey to Brisbane at 9:20 PM.


