வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய தினம் (25.11.2025) மாலை 3.00 மணியளவில், Rotaract Club of Vavuniya Heritage கழகத்தின் ஒழுங்கமைப்பில் மரம் நடும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில், ஈஸ்வரன் விளையாட்டு கழக உறுப்பினர்களும், பொதுமக்களும் இணைந்து மரங்களை ஆர்வத்துடன் நடுவதில் ஈடுபட்டனர். மேலும், கழகத்தின் ஆலோசகராக இருந்துவரும் திரு ஜெனோவிராஜ் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
“1000 மரங்கள்” எனும் தூர நோக்குடன் திட்டமிடப்பட்ட இந்த பசுமை முயற்சியின் முதல் கட்ட நடவடிக்கையாக, இந்நிகழ்வு அமையப்பெற்றது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலை காக்கவும், பசுமையான உலகத்துக்கான அடித்தளத்தை அமைக்கவும் இந்த முயற்சி முக்கிய பங்காற்றுவதாகும்.
அனைவரின் ஒற்றுமையும், உற்சாக பங்கேற்பும் இந்தச் செயற்பாட்டிற்கு வலுவூட்டியாக அமைந்தது.



