உலகெங்கிலும் உள்ள 193 நாடுகள் இணைந்து இன்று (ஒக்டோபர் 09) 151வது உலக தபால் தினத்தைக் கொண்டாடுகின்றன. உலக தபால் ஒன்றியத்தின் முடிவின்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
1874ஆம் ஆண்டு ஒக்டோபர் 09ஆம் திகதி அன்றுதான், பல நாடுகள் ஒன்றிணைந்து உலக தபால் ஒன்றியத்தை (Universal Postal Union – UPU) நிறுவுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. அதன் நினைவாக, 1969ஆம் ஆண்டு முதல் இந்த நாள் உலக தபால் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இலங்கையில் தேசிய தபால் தினம்
இந்த நிகழ்வையொட்டி, இலங்கையில் 56வது தேசிய தபால் தின விழா இன்று காலை பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.
தபால் ஊழியர்களின் எதிர்ப்பு
இதற்கிடையில், தபால் திணைக்களத் தலைவர் தபால் ஊழியர்கள் மேலதிக நேர ஊதியத்தை மோசடியாகப் பெற்றதாகக் கூறிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தபால் தொழிற்சங்கங்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து பணிக்குச் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளன.
அத்துடன், இது தொடர்பாக இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Today, October 9th, marks the 151st World Post Day, celebrated globally by 193 member countries of the Universal Postal Union (UPU), established on this date in 1874. In Sri Lanka, the 56th National Post Day celebration is being held today in Badulla, presided over by Health and Media Minister Dr. Nalinda Jayathissa. However, postal trade unions have announced they will wear black armbands in protest against the Postmaster General’s accusation that postal workers fraudulently obtained overtime pay, and they plan to file a complaint with the CIABOC today regarding the issue.