மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய மாகாணத்திலும், மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
_____________________________________________________________________
The Department of Meteorology has forecast intermittent rain for the Western, Sabaragamuwa, Northwestern, and Southern provinces, including the Kandy and Nuwara Eliya districts. Moderately heavy rainfall of around 50 mm is expected in certain areas within these provinces. Light rain is also anticipated in the North Central, Matale, Mannar, and Jaffna districts. Furthermore, strong winds reaching 40-50 km/h are expected in several regions, and the public is advised to take necessary precautions to mitigate potential risks.