புத்தளம் – வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரு மாணவி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி, உயர்தர வணிகப் பிரிவில் கல்வி கற்று வந்த ஏ.எம்.சமுதி மல்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த சனிக்கிழமை இரவு, மாணவி தனது குடும்பத்துடன் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வீதியில் இருந்த அபாயகரமான இடத்தில் மோதியதால், மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார்.
விபத்து நடந்தபோது மாணவி தலையில் தலைக்கவசம் (helmets) அணியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இதனால், தலையில் பலத்த காயமடைந்த மாணவி, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அவரது தந்தை கைது செய்யப்பட்டு, மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
_____________________________________________________________________
A female student, A.M. Samudhi Malsha, died after falling from a motorcycle while riding with her father in the Wennappuwa area of Puttalam. The incident occurred on Saturday night as they were returning home from an event. The student, who was studying in the Advanced Level commerce stream, was not wearing a helmet and suffered a severe head injury. She was admitted to the Colombo National Hospital for treatment but passed away the night before last. Her father, who was driving the motorcycle, was arrested and later released on bail by the Marawila Magistrate’s Court.