காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் (உடலால் ஒட்டிய இரட்டையர்கள்) பிறந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயன குறிப்பிட்டார். இந்தக் குழந்தைகள் கடந்த 10ஆம் திகதி பிறந்துள்ளன.
ஒரு குழந்தையின் எடை 2 கிலோ 200 கிராம் என இருக்க, மொத்தமாக இரண்டு குழந்தைகளும் 4 கிலோ 400 கிராம் எடையுடன் ஆரோக்கியமாகப் பிறந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சத்திரசிகிச்சை
வயிற்றுப் பகுதியால் ஒன்றிணைந்துள்ள இந்தக் குழந்தைகளைப் பிரிப்பதற்கான சத்திரசிகிச்சை மூன்று மாதங்களுக்குப் பிறகு, கொழும்பு சிறுவர் சீமாட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
காசல் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது. இருப்பினும், அண்மைக் காலத்தில் உடலால் ஒட்டிய இரட்டையர்கள் (Conjoined Twins) பிறந்தது இதுவே முதல் சந்தர்ப்பம் என மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.
The Director of Castle Street Hospital for Women, Dr. Ajith Dantanarayana, announced the birth of conjoined twins (Siamese twins) at the hospital on the 10th of this month. The babies were born healthy with a combined weight of 4 kg 400 grams (with one twin weighing 2 kg 200 grams). He stated that the surgical procedure to separate the children, who are joined at the abdomen, is scheduled to take place at the Lady Ridgeway Hospital for Children in three months. While twin births are common, this is the first recent instance of conjoined twins being born at the Castle Street Hospital.



