தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொட்டலங்களை கண்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, அந்த வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ள நிலையில், அரச இரசாயன பகுப்பாய்வு பரிசோதனையும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
__________________________________________________________
Two bodies were discovered in a house undergoing renovations in the Thangalle Seenimodara area. During the investigation, police found 10 packets of “ice” (crystal methamphetamine) in a lorry parked near the house. Another individual from the same house was hospitalized due to a sudden illness but also passed away. The police have launched an investigation into the incident, and a government chemical analysis is being conducted.