Tuesday, November 18, 2025

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் தாயார் கூறிய அதிர்ச்சி!

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன், அந்த வழக்குக்குச் சாட்சியமளிக்கவிருந்த தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வரும் 22ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறிய தந்தைக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாயாருக்கு அச்சுறுத்தல்

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: கடந்த 2016ஆம் ஆண்டு, மட்டக்களப்பைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதாக, அவரது சிறிய தந்தை கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சிறுமியின் தாயார் ‘சிறுமிக்கு அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவில்லை’ என சாட்சியமளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சிறிய தந்தை சிறுமியின் தாயாரை பொய் சாட்சியம் அளிக்குமாறு அச்சுறுத்தியது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அந்தச் சிறுமியின் சிறிய தந்தையாரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், அடுத்த வழக்கு விசாரணைக்கு வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கட்டளையிட்டார்.

______________________________________________________________

A man has been remanded until the 22nd of this month for allegedly sexually assaulting a minor and threatening her mother, who was a witness in the case. The suspect, the victim’s uncle, was initially arrested in 2016 for the assault on the then 11-year-old girl. After being released on bail, the case was transferred to the Batticaloa High Court. During a recent hearing, the girl’s mother testified that the assault did not occur, and subsequent investigations revealed that the uncle had threatened her to give false testimony.

Hot this week

வெளிநாட்டு பெண்களுக்கு ஆபத்தாக மாறுகிறார்களா இலங்கை ஆண்கள்?

பரகஹதெனிய-மாவதகம வீதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பெண்களிடம் தகாத செயற்பாட்டில்...

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன்; இளம் குடும்பப்பெண் பலமுறை சீரழிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் - கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட...

வெலிமடை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி!

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில்...

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் கடும் மூடுபனி!

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு...

Topics

மீடியாகொட துப்பாக்கிச் சூடு; மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்...

யாழ்ப்பாணக் கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்தச் சிலை!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று (17) பௌத்த மதத்துடன்...

இன்றைய வானிலை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img