வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
வவுனியா மாவட்டத்தின் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டதே பேராறு நீர்த்தேக்கம் ஆகும்.
இந்நிலையில், தற்போது இந்த நீர்த்தேக்கத்தின் கரைகளில் பெருமளவான மீன்கள் மர்மமான முறையில் இறந்துபோய் ஒதுங்கிக் காணப்படுவது இப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மீன்கள் இறந்ததற்கான சரியான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
A large number of fish are washing ashore dead in the Pudukulam Peraru Reservoir in the Vavuniya District. The Peraru Reservoir was established to meet the drinking water needs of the Vavuniya District, and the mass fish mortality is currently a cause for concern in the area.


